பராகுவே அணி ’பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஜெர்மனியை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கோப்பையில் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடர் கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ’ரவுண்ட் 32’ எனப்படும் நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வலுவான ஜெர்மனி அணி பராகுவே அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் ஆரம்பம் முதல் கோல் அடிக்கும் முயற்சியில் தாக்குதல் ஆட்டத்தை கையாண்டனர்.
பராகுவே ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியை எப்படி வீழ்த்தியது?
முதல் பாதியின் இறுதி நேரத்தில் பராகுவே அணியின் ஜுலியோ என்கிசோ மதியாஸ் கலார்ஸா உதவியுடன் தலையால் முதல் கோல் அடித்து கணக்கை துவக்கினார். பின்னர் இரண்டாம் பாதியில் 53வது நிமிடத்தில் ஜெர்மனி அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் கை ஹவெர்ட்ஸ் கோல் அடித்து சமன் செய்தார். பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் (penalty shoot out) (கூடுதல் 30 நிமிடங்கள்) முறைக்கு போட்டி சென்றது. அப்போது 101வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜொனதன் டா கோல் அடித்தார்.
பராகுவே ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியில் VAR திருப்புமுனை
ஆனால், VAR தொழில்நுட்பம் மூலம் நடுவர் அந்த கோலை ஃபவுல் எனக்கூறி ரத்து செய்தார். இந்த சர்ச்சைக்குரிய முடிவு ஜெர்மனியின் தலையெழுத்தை மாற்றியது. 123வது நிமிடத்தில் பராகுவே அணி பெனால்டி ஷூட் அவுட்டில் முதல் கோலை அடித்தது. அதற்கு 124வது நிமிடத்தில் கோல் அடித்து ஜெர்மனி அணி பதிலடி கொடுத்தது. அதனைத்தொடர்ந்து பராகுவே, அணி 125வது நிமிடத்தில் தொடங்கி 3 கோல்கள் அடித்த நிலையில், ஜெர்மனி 2 கோல்களை அடித்தது. இதன் முடிவில் பராகுவே அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்று, வரலாறு படைத்தது.
இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி அணி வெளியேறியது மிகப்பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. பெனால்டி ஷூட் அவுட்டில் சிறப்பாக விளையாடும் ஜெர்மனி இந்த முறை கோட்டை விட்டதால் உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. கடைசியாக 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனி, அதன்பிறகு ’ரவுண்ட் 16’ சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் திணறி வருகிறது.
ஃபிஃபா தரவரிசையில் 41வது இடத்தில் இருக்கும் பராகுவே அணி 10வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி அணியை வீழ்த்தியது உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மிகப்பெரும் தோல்விகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பராகுவே அணி வரும் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் ’ரவுண்ட் 16’ சுற்று போட்டியில் பிரான்ஸ் அல்லது சுவீடன் அணியை எதிர்கொள்ளும்.
ஹஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ’ரவுண்ட் 32’ சுற்று போட்டியில் பிரேசில், ஜப்பான் அணிகள் மோதின. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் கணக்கை துவங்குவதில் மும்முரம் காட்டினர். அதன்படி 29வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர், கைஷூ சனோ முதல் கோல் அடித்தார்.
இதையும் படிங்க: வெனிசுலா நிலநடுக்க துயரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய நெய்மர் ஜூனியர்
பின்னர் இரண்டாம் பாதியில் பிரேசில் அணியின் கேஸ்மிரோ 56வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் இரு அணிகளும் சிறந்த தற்காப்பு ஆட்டம் மூலம் இறுதிகட்டம் வரை 2வது கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் கூடுதல் நேரத்தில் 95வது நிமிடத்தில் கேப்ரியல் மார்டிநெல்லி 2வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ’ரவுண்ட் 16’ சுற்றுக்கு முன்னேறியது.

