பள்ளி மாணவர்களுக்கு உணவு இனிப்பு காரம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக். போளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் கர்மவீரர் கல்வித்தந்தை காமராஜ் அவர்களின் 124 வது பிறந்த நாள் தினம் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் கர்மவீரர் கல்வித்தந்தை காமராஜ் அவர்களின் 124 வது பிறந்த நாள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு உணவு, இனிப்பு, காரம் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேகத்திற்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழக வெற்றிக்கழக மாவட்ட துணைச் செயலாளர் ராஜலட்சுமி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது உடன் வட்டார கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், மகேஷ், சங்குபானி, ஆப்பிள் கணேஷ் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

