Homeசெய்திகள்400 பேர் பலி: ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தாக்குதல் – மனிதநேயமற்ற செயல்

400 பேர் பலி: ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தாக்குதல் – மனிதநேயமற்ற செயல்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக எல்லைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்த தாக்குதல் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.

நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் நடந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.பெஹ்ஷூத் மாவட்டத்தில் ஒரு வீடு குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு பணிகள் ததொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்த தாக்குதல் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மேற்ககொள்ளப்பட்டது என பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், காபூலில் உள்ள பெரிய மறுவாழ்வு மருத்துவமனை மீது நடந்த வான்வழித் தாக்குதல் உலகளவில் கடும் எதிர்ப்பைகிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானனோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அச்சம் நிலவுகிறது.

இந்த தாக்குதலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

பொதுமக்கள் வாழும் இடங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எந்த சூழலிலும் ஏற்றுக்ககொள்ள முடியாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஒரு பபோர்க்குற்றம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புனிதமான ரமலான் காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த கவலைக்குரியது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ககோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பபோது, இந்த சம்பவம் ததொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு வழங்குவது அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை