Homeசெய்திகள்ஆட்சியர் வந்தனா கார்க் மனிதநேய செயல்: மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனு பெற்ற நெகிழ்ச்சி தருணம்!

ஆட்சியர் வந்தனா கார்க் மனிதநேய செயல்: மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனு பெற்ற நெகிழ்ச்சி தருணம்!

திருவண்ணாமலையில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர் வந்தனா கார்க் மனிதநேய செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திலேயே கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல் பாராட்டு*

காலதாமதமாக வந்து மாற்றுத்திறனாளி இடம் இருந்தும் தனது அறையில் இருந்து வெளியே வந்து மனுவினை பெற்றுக்கொண்டு ஆட்சியரின் செயல் பாராட்டு*

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 1435 பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது. பசலி வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளான இன்று மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளிடம் ஆட்சியர் வந்தனா கார்க் நேராக தனது அறையில் இருந்து வளாகத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுவினை பெற்றது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

மேலும் அதனைத் தொடர்ந்து காலதாமதமாக வந்த மாற்றுத்திறனாளிகளிடமும் இருந்தும் தனது அறையில் இருந்து வளாகத்திற்கு வந்து மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனு பெற்று அவர்களின் கோரிக்கையை நிதானமாக கேட்டு அறிந்து நிறைவேற்றுவதாக தெரிவித்தார் இந்நிகழ்வின் போது உடன் வட்டாட்சியர்கள் சாப்ஜான், பாலாஜி உள்ளிட்ட உடனே இருந்தனர்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை