திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் நலன் கருதி விரைந்து தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு…
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களிலிருந்து வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும் பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார்கள்.
அவ்வாறு வருகை தரக்கூடிய பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ராஜகோபுரத்தில் இருந்து சுமார்
2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
50 ரூபாய் கட்டண தரிசனத்தில் வரக் கூடிய பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசன டிக்கெட் பெற்றுக் கொண்டு காத்திருப்பு அறையில் காத்திருந்து சுமார் 3 முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் வாரந்தோறும் நடந்து வருகிறது.
குறிப்பாக திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இன்று அண்ணாமலையார் திருக்கோயில் ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணாமலையார் திருக்கோவிலில் ராஜகோபுரம் கொடிமரம் மூன்றாம் பிரகாரம் இரண்டாம் பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் இருக்க என்னென்ன வழிவகைகள் செய்ய முடியுமோ அனைத்தையும் விரைந்து செய்ய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள மின்விசிறி வசதி குடிநீர் வசதி ஏர் கூலர் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டவர் அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக பக்தர்களுக்கு செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது
அடுத்தடுத்த ஆய்வுகளின் போது பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

