Homeசினிமா புதுப்பிப்புகள்அருள்வான் படத்தின் முதல் சிங்கிள் ‘அல்லிப்பூவே’ வெளியீடு – வைரலாகும் லிரிக்கல் வீடியோ

அருள்வான் படத்தின் முதல் சிங்கிள் ‘அல்லிப்பூவே’ வெளியீடு – வைரலாகும் லிரிக்கல் வீடியோ

நடிகர் அருள் நிதி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் அருள்வான். இந்தப் படத்தில் இருந்து அல்லிபூவே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அரசியல் பக்கம் செல்லாமல் நடிப்பு துறையை தேர்வு செய்தார் நடிகர் அருள் நிதி. இவர் தமிழ் சினிமாவில் வெளியான வம்சம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகர் அருள் நிதி. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அருள் நிதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அருள் நிதி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் தற்போது வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் நடிகர் அருள் நிதி நடிப்பில் புதிதாக உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் அருள் நிதி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அருள்வான். இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிளான அல்லிப்பூவே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அருள்வான் படத்திலிருந்து வெளியானது அல்லிப்பூவே பாடல்:
அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ள இந்த அருள்வான் படத்தை இயக்குநர் கணேஷ் நாயகன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி உடன் இணைந்து நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், VTV கணேஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைதுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து அல்லிப்பூவே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை