Homeசெய்திகள்மின் கட்டணத்தை குறைக்க ஃபிரிட்ஜில் இந்த ட்ரிக்கை செய்யுங்கள்... நிபுணர்கள் சொல்லும் எளிய வழி!

மின் கட்டணத்தை குறைக்க ஃபிரிட்ஜில் இந்த ட்ரிக்கை செய்யுங்கள்… நிபுணர்கள் சொல்லும் எளிய வழி!

குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கும் குளிர்ச்சியைத் தக்கவைக்க, கம்ப்ரஸர் (compressor) தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது. இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுப்பதோடு, பாகங்கள் விரைவில் பழுதடைவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.

கோடைக்கால வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், அனைவரும் அவரவர் வீடுகள் அல்லது அலுவலகங்ளில் ஏசி அருகிலேயே இருப்பதையே விரும்புகிறார்கள். கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, ​​நம் கவனம் இயல்பாகவே ஏசி (AC), கூலர்கள் மற்றும் ஐஸ் ட்ரேக்கள் (ice trays) பக்கம் திரும்புகிறது.

நமக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டில் நாம் வாங்கும் காய்கள், பழங்கள், பால் என அனைத்துக்கும் இந்த பருவத்தில் அதிக குளிர்ச்சி தேவைப்படுகிறது. இந்த கடும் வெப்பத்தில் எந்த சமையலறை உபகரணம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அது உங்கள் குளிர்சாதனப் பெட்டி (refrigerator) தான்.

இந்த பருவத்தில் குளிர்சாதனப் பெட்டியைச் சரியாகப் பராமரிப்பது மிக முக்கியம். இதற்கு விலையுயர்ந்த கருவிகள் எதுவும் தேவையில்லை. வெறும் ஒரு A4 காகிதம் மூலம் குளிர்சாதனப் பெட்டியை சரியாக பராமரிப்பதோடு மின் கட்டணத்தையும் குறைக்கலாம்! ஆம், இது உண்மைதான்.

கோடைக்காலத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒரு காகிதத் துண்டை வைக்குமாறு நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? இங்கே தெரிந்துகொள்வோம்.

உலகம் முழுதும் அதிகரிக்கும் வெப்பம்
உலகின் பல பகுதிகள் தற்போது கடுமையான ‘ஹீட் டோம்’ (heat dome) எனப்படும் வெப்ப மண்டலத்தின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதீத வெப்பநிலை உங்களைச் சோர்வடையச் செய்வது மட்டுமல்லாமல், உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் மீதும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஓவர்டைம் செய்யும் கம்ப்ரஸர்
குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கும் குளிர்ச்சியைத் தக்கவைக்க, கம்ப்ரஸர் (compressor) தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது. இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுப்பதோடு, பாகங்கள் விரைவில் பழுதடைவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, வெப்பம் அதிகரிக்கும்போது உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் நிலையைச் சரிபார்ப்பது அவசியமாகும்.

30 வினாடி காகித உத்தி
உங்கள் குளிர்சாதனப் பெட்டியைச் சரிபார்க்க மெக்கானிக்கை அழைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சாதாரண A4 காகிதம் மட்டுமே இதற்கு போதுமானது. 30 வினாடி காகித உத்தி (30 Minute Paper Trick) பற்றி இங்கே காணலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்து, காகிதத்தின் பாதி உள்ளேயும் மீதி வெளியேயும் இருக்குமாறு வைத்துவிட்டு, கதவை மூடவும்.
இப்போது, ​​அந்தக் காகிதத்தை வெளியே இழுக்க முயற்சிக்கவும்.
அதை இழுக்கும்போது ஏதேனும் தடை அல்லது சற்று விசை (force) தேவைப்பட்டால், உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் ரப்பர் சீல் (rubber seal) நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம்.
ஆனால், எந்த முயற்சியும் இன்றி காகிதம் எளிதாக வெளியே வந்துவிட்டால், கதவு சரியாக மூடப்படவில்லை (சீல் ஆகவில்லை) என்று பொருள்.

அமெரிக்க எரிசக்தித் துறையும் இதைத்தான் பரிந்துரைக்கிறது
இது ஏதோ ஒரு சாதாரண அல்லது போலியான இணைய உத்தி அல்ல. ஆற்றல் விரயத்தைத் தடுப்பதற்கான மிக எளிய வழிகளில் ஒன்று குளிர்சாதனப் பெட்டியின் கதவு சீலை (gasket) சரிபார்ப்பது என்று அமெரிக்க எரிசக்தித் துறையின் ‘எனர்ஜி சேவர்’ (Energy Saver) திட்டம் குறிப்பிடுகிறது. குளிர்சாதனப் பெட்டியின் சீல் காற்று புகாதவாறு இல்லையென்றால், குளிர்ந்த காற்று வெளியேறுவதைத் தடுக்க அதை உடனடியாக மாற்ற வேண்டும்.

முதலாவதாக, இது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த காற்றை வெளியேறவும், வெப்பமான காற்றை உள்ளே நுழையவும் அனுமதிக்கிறது. இதனால், வெப்பநிலையைத் தக்கவைக்க கம்ப்ரஸர் பகலும் இரவும் தொடர்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இரண்டாவது பாதிப்பு உங்கள் மின்சாரக் கட்டணத்தில் காணப்படுகிறது. இது கோடை மாதங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு உயரும். மேலும், எனர்ஜி ஸ்டார் (ENERGY STAR) வழிகாட்டுதல்களின்படி, உணவைப் பாதுகாப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை 35 முதல் 38 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருப்பது அவசியம். சீல் சேதமடைந்தால் இந்த நிலையைத் தக்கவைப்பது சாத்தியமற்றதாகிவிடும்.

காகிதம் எளிதில் நழுவினால் என்ன செய்வது?
உங்கள் குளிர்சாதனப் பெட்டி இந்தக் காகிதச் சோதனையில் தோல்வியுற்றால், பீதியடைய வேண்டாம்.
முதலில், குளிர்சாதனப் பெட்டியின் சீல் மற்றும் கதவுச் சட்டத்தை வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான சோப்பு கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
பெரும்பாலும், அழுக்கு, கிரீஸ் அல்லது உணவுத் துகள்கள் கதவைச் சரியாக மூடவிடாமல் தடுக்கும்.
சீல் இறுகிவிட்டால், அதன் மீது சிறிது வெதுவெதுப்பான நீரை ஊற்றவும் அல்லது அதன் நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்க ஹேர்டிரையரை குறைந்த வெப்ப அமைப்பில் பயன்படுத்தவும்.
அதுவும் பலனளிக்கவில்லை என்றால், ஒரு புதிய சீலை வாங்கி பழையதை மாற்றவும்.
இது குளிர்சதனப் பெட்டியின் மீதான அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், மின் கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கும்.

குளிர்சாதனப் பெட்டிக்கான பராமரிப்பு குறிப்புகள்
இரண்டு வாரத்துக்கு ஒரு முறை குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்யுங்கள்.
ஒரு மாதத்துக்கு ஒரு முறை, குறிப்பாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் காகிதச் சோதனையைச் செய்யுங்கள். தற்கு எந்தச் செலவும் இல்லை.
மேலும் இது பிற்காலத்தில் ஏற்படக்கூடிய கணிசமான செலவுகள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் சுவருடம் ஒட்டி இல்லாமல் சிறிய இடைவெளி இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை