தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வந்த நிலையில், ஜூலை 01 முதல் மீண்டும் உயர தொடங்கி உள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை அடுத்த 8 மாதத்திற்கு எப்படி இருக்கும் என்பது ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார்.
ஜூன் 30 ஆம் தேதி 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 13200க்கு சரிந்த நிலையில், இன்று அதன் விலை ரூ. 13700 ஆக உள்ளது. 14 ஆயிரத்திற்கு மேலே சென்ற விலை கடந்த சில நாட்களாக குறைந்தது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்த சூழலில், மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளது மக்களை கவலை அடைய செய்துள்ளது.
இந்த நிலையில், யூடியூப் சேனலில் பேசிய ஆனந்த் சீனிவாசன், தங்கத்தின் விலையில் இருக்கும் இந்த ஏற்ற இறக்கங்கள் அடுத்த 8 மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், அமெரிக்க பெடரல் வங்கியின் முக்கிய புள்ளியான கெவின் மார்ஷன், நாங்கள் 2% பணவீக்கத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகிறோம். பணவீக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் வட்டி விகிதத்தை என்ன செய்ய போகிறோம் என்பதை இப்போது சொல்ல முடியாது என தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சின் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493 டாலர் வரை உயர்ந்தது. அதன் எதிரொலியாக இங்கும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ. 150 வரை அதிகரித்துள்ளது என ஆனந்த் சீனிவாசன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்கத்தின் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் அடுத்த 8 மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை ஏற்றிவிடுமோ என்ற பயம் அடுத்த 8 மாதங்களுக்கு சந்தையில் நிலவும்.
இந்த பயத்தின் காரணமாக தங்கம் சந்தையில் இப்போதைக்கு ஒரு நிலையான பெரும் உயர்வை நோக்கி போக முடியாது. அதே நேரத்தில், சந்தை எவ்வளவு தூரம் கீழே விழும் என்பதையும் நம்மால் துல்லியமாக கணிக்க முடியாது என ஆனந்த் சீனிவாசன் கூறினார்.

