Homeஆன்மீகம்ஆடி முதல் வெள்ளி: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்!

ஆடி முதல் வெள்ளி: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்!

உலக பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் ஆலயம்| ஆடி மாதம் முதல் வெள்ளி பக்தர்கள் வருகை அதிகரிப்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள படைவீடு (படவேடு) என்ற கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. கமண்டல நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆடி மாதம் 7 வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஆடி பெருவிழா மிகவும் விசேஷமாகும். சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான தலமாக இருக்கிறது. இங்கு அம்மன் சிரசு சுயம்புவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங் குகிறார்.

அம்மன் சந்நிதிகளில் குங்குமம் பிரசாதமாக தரப்படுவது வழக்கம். ஆனால், படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயில் சுற்றுச்சுவர்களின் மீது சிங்கத்திற்கு பதிலாக பசுவின் சிலைகளே உள்ளது.

அம்மன் சந்நிதிகளில் பலிபீடம் முன்பாக யாழி அல்லது சிங்கம் இருக்கும். இங்கு மட்டும் எருது உள்ளது தனிச்சிறப்பு. சக்திக்குள் அனைத்தும் அடங்கும் என்பதை உணர்த்தும் வகையில் கோயில் கருவறையில் அம்மன் சுயம்பு சிரசுவாகவும், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அரூபங்களுடன் அருள்பாலிக் கின்றனர்.

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளது. ரேணுகாதேவியின் தலையை வெட்டிய பரசுராமனின் புராணத்தை பின்னணியாக கொண்டது இத்தலம். இக்கோயிலில் தரப்படும் தீர்த்தத்தை குடித்து அம்மனை வணங்கி பக்தர்கள் அருள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆடி வெள்ளி முதல் வாரமான இன்று படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தில் போளூர், ஆரணி, கண்ணமங்கலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் பல்வேறு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு பொங்கல் வைத்து வருகின்றனர் மேலும் காதணி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பழமையான படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை