Homeஆன்மீகம்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் கோலாகலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம் கோலாகலம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு
சிறப்பாக நடைபெற்றது….

ஆனி பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்….

பஞ்சபூத ஸ்தலங்களில்
அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது, 10 நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு
நாளும் காலை மாலை என இரு வேலைகளிலும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு கோயிலின் 4
மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள
தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும், சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி
பிரம்மோற்சவம் நடைபெறும், ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை
திறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு
அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு
காட்சி தந்தனர்.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ரேவதி நட்சத்திரம், மிதுன லக்னத்தில் இன்று காலை 06:06 மணிக்கு தஷ்ணாயன புண்ணியகால (ஆனி மாத பிரம்மோற்சவ ) கொடியேற்றம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயரம் கொண்ட தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது, பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிப்பட்டனர்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை