ஸ்ரீ முருகர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த காம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ முருகர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் காம்பட்டு, அணியாலை, பாடகம், போளூர், கலசப்பாக்கம், பெலாசூர், சனிக்கவாடி, மன்சூரபாத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
போளூர் அருகே காம்பட்டு ஸ்ரீ முருகர், விநாயகர், காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
By அஞ்சுகா ராஜா
0
4
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

