ஆடி பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்:ஆடி மாத பௌர்ணமி அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆறு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்.
ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருக்கோயிலின் பின்புறம் உளள 2668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து சென்று அண்ணாமலையாரை பக்தி பரவசத்துடன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று சொல்லி கிரிவலம் சென்று வழிபட்டு சென்றனர்.
அது மட்டுமில்லாமல் அண்ணாமலையார் திருக்கோவில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர வாசலில் இருந்து நீண்ட வரிசையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து பின்னர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

