அருண் விஜய்க்கு ஜோடியாகும் ஜெயிலர் பட நடிகை?
தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். இவர் தொடர்ந்து தமிழில் புது படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன் நடிக்கிறாராம். அது எந்த படம் என விவரமாக பார்க்கலாம்.
நடிகர் அருண் விஜய் (Arun Vijay) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் ரெட்ட தல (Retta Thala). கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த இப்படமானது, இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்தாக இவர் தொடர்ந்து புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். தற்போதுவரை கிட்டத்தட்ட 2 படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதில் ஒரு படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஜெயிலர் (Jailer Movie Actress) படத்தில் நடித்திருந்த மிர்னா மேனன் (Mirna Menon) நாயகியாக நடிக்கிறாராம்.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் மிர்னா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அருண் விஜய் மற்றும் மிர்னா மேனன் கூட்டணியானது புது படத்தில் இணைந்துள்ளது. அந்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?. வேறுயாருமில்லை இயக்குநர் முத்தையாதான்.
முத்தையா இயக்கத்தில் இணையும் அருண் விஜய் மற்றும் மிர்னா மேனன்:
தமிழில் சசிகுமாரின் குட்டிப் புலி (2013) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் முத்தையா. இப்படமானது கிராமிய கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதன் வெற்றியை அடுத்ததாக 2015ம் ஆண்டில் கார்த்தியின் நடிப்பில் கொம்பன் என்ற படத்தை இயக்கியும் வெற்றியை பெற்றார். இவ்வாறு தொடர்ந்து கிராமிய கதைக்களத்தில் படங்களை இயக்கி சிறப்பான வரவேற்பை பெற்றார்.
இந்த வெற்றியை அடுத்ததாக தற்போது அருண் விஜயை வைத்து புது படத்தை இயக்கிவருகிறார். இந்த படமானது முற்றிலும் கிராமிய கதைக்களத்தில் உருவாக்க அவருடன் மிர்னா மேனன் நாயகியாக நடிக்கிறார். மேலும் இதில் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் தமிழில் தற்போது முத்தையா இயக்கத்தில் புது படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு பிறகும் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளாராம். அது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

