Homeசெய்திகள்சென்னை–திருச்சி 3 மணி நேர பயணம்! ரூ.20,000 கோடி விரைவுச்சாலை பணிகள் தொடக்கம்

சென்னை–திருச்சி 3 மணி நேர பயணம்! ரூ.20,000 கோடி விரைவுச்சாலை பணிகள் தொடக்கம்

தற்போதுள்ள நிலவரப்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். இந்த நிலையில், அது விரைவில் 3 மணி நேரமாக குறைய உள்ளது.

சென்னையில் (Chennai) இருந்து திருச்சிக்கு (Trichy) இனி விரைவில், வெறும் மூன்று மணி நேரத்தில் பயணம் செய்யலாம். அதாவது, சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்ய சுமார் 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய விரைவுச்சாலை திட்ட பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் பயண நேரம் குறைந்து வெறும் மூன்று மணி நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்ய முடியும். இந்த விரைவுச்சாலை திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி சென்னையில் இருந்து திருச்சி செல்ல வெறும் 3 மணி நேரம்
சென்னையில் இருந்து திருச்சிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் விரைவுச்சாலை அமைக்கும் திட்ட பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது. சுமார் ரூ.20,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், தமிழ்நாட்டின் 2வது மிகப்பெரிய தேசிய விரைவுச்சாலையாக அமைய உள்ளது. இதற்கு முன்னதாக சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்
சென்னை – திருச்சி இடையே அமைய உள்ள இந்த புதிய விரைவுச்சாலையில் வாகனங்கள் மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம். தற்போதுள்ள நிலவரப்படி சென்னை – திருச்சி இடையே பயணம் செய்ய சுமார் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. ஆனால், இந்த விரைவுச்சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பயண நேரம் பாதியாக குறையும். அதாவது வெறும் 3 மணி நேரமாக குறையும்.

இந்த சென்னை – திருச்சி புதிய விரைவுச்சாலை தமிழகத்தில் 12 மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படும். இதன் காரணமாக 12 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைய உள்ளனர். இந்த சாலை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகள் உடன் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை