Homeசினிமா புதுப்பிப்புகள்முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த தியான் ஸ்ரீனிவாசன்.. சர்ச்சையை கிளப்பிய பேச்சு!

முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த தியான் ஸ்ரீனிவாசன்.. சர்ச்சையை கிளப்பிய பேச்சு!

அவர் செய்தது போல நான் எதுவும் செய்யமாட்டேன்.. முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த மலையாள நடிகர்! கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் அனைவரின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நடிகர்தான் தியான் ஸ்ரீனிவாசன். இவர் தமிழக முதல்வர் விஜயை குறித்து கிண்டல் செய்து பேசியிருந்தார். இது ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரை குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபலமான 80ஸ் நடிகராக இருந்தவர் ஸ்ரீனிவாசன் (Sreenivasan). இவரின் மகனாக தற்போது மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருப்பவர் தியான் ஸ்ரீனிவாசன் (Dhyan Sreenivasan). இவர் பேசிய விஷயம் கடந்த சில நாட்களாக திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரின் நடிப்பில் “விசிட்டர்” (Visitor) என்ற படமானது வெளியாக காத்திருக்கும் நிலையில், அதன் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் முதலில், பேசும்போது அவர் திரிஷாவை (Trisha) தாக்கி பேசியிருந்தார். தியான் ஸ்ரீனிவாசன், நடிகை நவ்யா நாயரிடம், “நான் முதல்வரானது, நீ பட்டுப்புடவை மற்றும் வைர நகையை போட்டு வரவேண்டும்” என பேசியிருந்தார். இது ஏற்கனவே இணையத்தை பரபரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு நடிகர் அஜூ வர்கீஸ் (Aju Varghese) மன்னிப்பு கேட்டிருந்தார். அதையடுத்து மீண்டும் சமீபத்தில், நேரடியாக முதலமைச்சர் விஜயை கிண்டல் செய்துப் பேசியுள்ளார். இது தற்போது தமிழக மக்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

என் நண்பன் ஒரு பைத்தியம்… தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்
இதையும் படிங்க: தேசிய விருது வென்ற அமரன் படக்குழு.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

முதல்வர் விஜய் குறித்து மீண்டும் கிண்டல் செய்து பேசிய தியான் ஸ்ரீனிவாசன்:
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தியான் ஸ்ரீனிவாசன், “அவர் முதலமைச்சராகத் தயாராகி வரும் நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் விஜய் செய்தது போல கேரளாவிலும் செய்ய விரும்புகிறீர்களா என்று தொகுப்பாளர் கேட்டபோது, ​​தியானின் பதில் இதுவாக இருந்தது. ‘நான் முதலில் ‘அம்மா’வின் தலைவராவேன், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோசப் விஜய் சொல்வது போல் வருவேன். ஆனால், அவர் செய்த எதையும் நான் செய்ய மாட்டேன், இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது” என அதில் அவர் கூறியுள்ளார்.

அதன் பிறகு பேசிய அஜூ வர்கீஸ், “தியானால் இனி தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது” என்று முதல் நிகழ்ச்சியின் மேடையில் நகைச்சுவையாகக் கூறியிருந்தார். சமூக ஊடகங்களில் வரும் கருத்துக்கள், விஷயங்கள் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

தமிழக முதல்வர் விஜய் குறித்து , நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் சர்ச்சையாக பேசியிருந்த நிலையில், தற்போது அவர் மீது கேரளாவிலும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு தமிழக அரசு அல்லது தொண்டர்களால் எதுவும் சட்டப்படி நடவெடிக்கைகள் எடுக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை