கட்டா குஸ்தி பட இயக்குநருடன் இணையும் நடிகர் கென் கருணாஸ் – வைரலாகும் தகவல். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக உள்ள நடிகர் கென் கருணாஸ் அடுத்ததாக எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமா பிரபலங்களான நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸின் மகன் ஆவார். வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன கென் கருணாஸ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படங்களில் அவர்களின் சிறு வயது கதாப்பாத்திரம் அல்லது அவர்களின் மகன் என முக்கிய வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து கென் கருணாஸ் நடிப்பில் வெளியாகும் படங்களில் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் கென் கருணாஸ் தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.
அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் யூத். இந்தப் படத்தை கென் கருணாஸ் எழுதி இயக்கியது மட்டும் இன்றி அவரே நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் இவர் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கட்டா குஸ்தி பட இயக்குநருடன் இணையும் நடிகர் கென் கருணாஸ்:
யூத் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, சமீபத்தில் கட்டா குஸ்தி போன்ற மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கிய இயக்குனர் செல்லா அய்யாவுவுடன் தனது அடுத்த படத்திற்காக கென் கருணாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒரு முழுமையான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாக அமையவுள்ளது. தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் ராஜன் வகையறா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அந்தப் பணிகளை முடித்த பிறகு செல்லா அய்யாவுடனான இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

