Homeசெய்திகள்பேரனின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின்! வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

பேரனின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின்! வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி ஸ்டாலின் லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் இன்பன் உதயநிதியின் பட்டமளிப்பு விழா ஜூலை 14, 2026 இன்று நடைபெற்ற நிலையில் தனது பேரனை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த படங்கள் வரைலாகி வருகிறது.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பேரனும் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி ஸ்டாலின் லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடரப்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். பட்டப்படிப்பை முடித்து சென்னை திரும்பிய இன்பன் உதயநிதி தற்போது கலைஞர் டிவி நிர்வாக பொறுப்பையும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார். அவர் தற்போது ரெட் ஜெயண்ட் சார்பாக பிரம்மாண்ட படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வருகிறார்.

இதனையடுத்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தார். இவர் நிர்வாக பொறுப்பை ஏற்ற பிறகு ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, அதவர்வாவின் இதயம் முரளி ஆகிய படங்கள் வெளியிடப்பட்டது.

உதயநிதி முழுநேர அரசியலில் இறங்கிய நிலையில் அவரது மகன் இன்பன் தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில் இன்பன் உதயநிதியின் பட்டமளிப்பு விழா லண்டனில் நடைபெற்றது. இதற்காக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் 10 நாட்கள் பயணமாக லண்டன் சென்றிருந்தார். இந்த நிலையில் இன்பன் உதயநிதியின் பட்டமளிப்பு விழா ஜூலை 14, 2026 இன்று நடைபெற்ற நிலையில் இன்று அவர் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

இதனையடுத்து பட்டம் பெற்ற தனது பேரனை மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி மகிழ்ந்த புகைப்படத்தை இன்பன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பட்டம்பெற்ற தனது மகனின் படத்தை பகிர்ந்த உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு வருகிற ஜூலை 20, 2026 அன்று சென்னை திரும்புகின்றனர்.

அவர் திரும்பி வந்ததும் திமுகவின் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக அவர் லண்டன் செல்லும் முன் தி​முக​வின் கிளைக் கழகம் முதல் தலை​மைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்​றும் மறுகட்​டமைப்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக 10 பேர் கொண்ட ஆலோ​சனைக் குழுவை உருவாக்கியிருந்தார்.

இன்பன் உதயநிதி அடுத்ததாக ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறார். தற்போது கமல் தயாரிப்பில் தர்மன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்தப் படம் முடிவடைந்த பிறகு ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை