Homeசெய்திகள்பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல்.. 10 பேரை கைது செய்த போலீசார்!

பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல்.. 10 பேரை கைது செய்த போலீசார்!

அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் கூலிப்பு உள்ளிட்ட குட்கா பொருட்களை காரில் கடத்த முயன்ற நபர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார்.பெங்களூரில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்த முயன்ற சுமார் 20 மூட்டை குட்கா பறிமுதல்.போலீசாரின் தீவிர வேட்டையில் சிக்கியதன் பின்னணி இரவோடு இரவாக தட்டி தூக்கிய போலீசார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் காவல் ஆய்வாளர் நாகராஜன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெங்களூரில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்த முயன்ற சுமார் 20 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த சம்பவம் தற்போது கலசபாக்கம் வட்டாரத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கலசபாக்கம் வட்டம் லாடவரம் கிராமத்தின் வழியாக காரில் குட்கா கடத்தப்படுவதாக கலசபாக்கம் காவல் ஆய்வாளர் நாகராஜன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

உடனடியாக காவல் ஆய்வாளர் நாகராஜன் தனது குழுவுடன் லாடவரம் கிராமத்திற்கு சென்று அங்கு சினிமா பட பானியில் குட்கா கடத்த முயன்றவர்களை காரில் சேஸ் செய்து மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கலசபாக்கம் போலீசார் இந்த சேசிங்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அடுத்த கொடுக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவருடைய 42 வயது மகன் குமாரை கலசபாக்கம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் திடுக்கு பிடியான விசாரணையில் குமார் தாங்கள் தொடர்ந்து பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை,விழுப்புரம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குட்காவை கடத்திச் சென்று விற்பதை ஒப்புக்கொண்டார்.

பின்னர் குமாரை விசாரணை செய்த போலீசார் அவர் கூறிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் அறிவுரையின்படி போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் வழிகாட்டுதலின்படி சென்னைக்கு விரைந்த கலசபாக்கம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் அங்கு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அம்மயம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனசெழியன் என்பவருடைய 30 வயது மகன் தினேஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரிடமிருந்து ஐந்து குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்து கலசபாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான 20 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த கலசபாக்கம் போலீசார் அவர்களிடம் இருந்து கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் பறிமுதல் செய்து இறுதியாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அடுத்த கொடுக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் சுமார் 10க்கும் மேற்பட்ட குட்கா கடத்தி விற்பனை செய்து நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நபரும் வந்தவாசி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு நபரும் தேசூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 3 நபரும் சேத்துப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு நபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள நான்கு நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை