Homeஅரசியல்தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: கைதான 3 பேருக்கு ஜூலை 15 வரை நீதிமன்ற காவல்!

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: கைதான 3 பேருக்கு ஜூலை 15 வரை நீதிமன்ற காவல்!

தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக கைதான 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆட்சி கவிழப்பில் ஈடுபட்ட 3 பேருக்கு நீதிமன்ற காவல்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்க்கும் வகையிலும், சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும், வாக்களிக்கவும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்
இவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு வருகிற ஜூலை 15- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அதிபன் ரமேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இளையராஜா எம். எல். ஏ.வை திருநாவுக்கரசு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளார்.

அரசியல் ஜனநாயக உத்திகள் கருத்துக்கணிப்பு நிறுவனம்
அப்போது, ஐபிடிஎஸ் என்ற இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அப்போது, தமிழக சட்டப் பேரவை தலைவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இதற்காக ரூ.35 கோடி வரை தருவதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த நிலையில், இது பற்றி வெளியே கூறினால் உனது குடும்பத்தினர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை