Homeசெய்திகள்செங்கம் செடல் மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை.. அம்மன் தாலியையும் அறுத்துச் சென்ற மர்மநபர்கள்!

செங்கம் செடல் மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை.. அம்மன் தாலியையும் அறுத்துச் சென்ற மர்மநபர்கள்!

செங்கம் டவுன் செடல் மாரியம்மன் மற்றும் தர்மசாஸ்த்தா அய்யப்பன் கோவில்களில் இரண்டு உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை! அம்மன் கழுத்தில் இருந்த தங்க பொட்டு தாலியையும் அறுத்து சென்ற கொள்ளையர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன் தளவநாயக்கன் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செடல் மாரியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் தர்மசாஸ்தா ஆலயத்தில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரசித்தி பெற்ற செடல் மாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை இது வரையில் என்னப்படவில்லை என கூறப்படும் நிலையில் அம்மன் கழுத்தில் உள்ள பொட்டு தாலியையும் கொள்ளையர்கள் அடுத்து சென்றுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை