இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரின் நடிப்பில் உருவாகி உள்ள இம்மார்டல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹரின் இம்மார்டல் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனான ஜிவி பிரகாஷ் குமார் குழந்தையாக இருக்கும் போதே இசைத் துறையில் காலடிபதித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகும் பலப் பாடல்களில் குழந்தையின் போர்ஷனை பாடியுள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து இசையை முறையாக கற்றுக் கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு இசையமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார் ஜிவி பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் இவரது பாடல்கள் ஒளித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் குமார் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கி பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக காத்திருக்கின்றது.
அந்த வகையில் இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கி உள்ள படம் இம்மார்டல். நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எம் கார்த்திக், ஆதித்யா கதிர், குமார் நடராஜன் மற்றும் சுனிதா ஸ்ரேஸ்தா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இம்மார்டல் படம் வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

