கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ.2 சிறப்பு தள்ளுபடி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியது. இதற்கும் விளக்கம் அளித்துள்ள கோவை ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.2 தள்ளுபடி சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், அந்தச் சலுகை ரத்து செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் ஆவின் பால் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், அனைத்து வகை ஆவின் பாலும் வழக்கம்போல் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ஊடகங்களில் சென்னை மாநகரில் ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் தடையின்றி பால் விநியோகம்:
ஆனால், அவை உண்மைக்கு புறம்பானவை என்றும், சென்னையில் அனைத்து வகை ஆவின் பாலும் எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஆவின் தனது விரிவான விநியோக வலையமைப்பு மூலம் தினசரி சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பாலை நுகர்வோருக்கு வழங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
36,000 லிட்டர் கூடுதலாக பால் விற்பனை:
மேலும், ஜூன் 2025-ல் தினசரி சராசரியாக 14.46 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூன் 2026-ல் அது 14.82 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டைவிட 36 ஆயிரம் லிட்டர் கூடுதலாக பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது.
எனவே, எந்தவொரு பால் வகையிலும் விநியோகம் குறைக்கப்படவில்லை என்றும், நுகர்வோர் தேவைக்கு ஏற்ப வழக்கமான முறையில் பால் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் ஆவின் கேட்டுக்கொண்டுள்ளது.
மாதாந்திர அட்டைதாரர்களுக்கு சலுகை தொடரும்:
இதற்கிடையில், கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ.2 சிறப்பு தள்ளுபடி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியது. இதற்கும் விளக்கம் அளித்துள்ள கோவை ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.2 தள்ளுபடி சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், அந்தச் சலுகை ரத்து செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

