HomeWeatherதமிழகத்தில் வெப்ப அலை தீவிரம்: 100°F-ஐ தாண்டிய வெப்பநிலை - பொதுமக்களுக்கு வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்ப அலை தீவிரம்: 100°F-ஐ தாண்டிய வெப்பநிலை – பொதுமக்களுக்கு வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்ப அலை தீவிரம்! மதுரை, கரூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 100°F-ஐ தாண்டிய வெப்பநிலை; வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு கொளுத்தும் வெயிலும், அனல் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கடும் வெயிலின் தாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக, மதுரை மாநகரில் 102.92 டிகிரி பாரன்ஹீட் (39.4°C) வெப்பமும், மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி பாரன்ஹீட் (39.0°C) வெப்பமும் பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.

மேலும், கரூர் பரமத்தி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய நகரங்களிலும் தலா 100.4 டிகிரி பாரன்ஹீட் (38.0°C) வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த திடீர் வெப்பநிலை உயர்வு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை