Homeசினிமா புதுப்பிப்புகள்முதல்வர் விஜயை சந்தித்த ஏ.எல்.விஜய்... வைரலான பரிசு புகைப்படம்! பின்னணி என்ன?

முதல்வர் விஜயை சந்தித்த ஏ.எல்.விஜய்… வைரலான பரிசு புகைப்படம்! பின்னணி என்ன?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான இயக்குநராக இருந்துவந்தவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இன்று (04/07/2026) தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவருக்கு மறக்க முடியாத பரிசையும் வழங்கியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களின் வரிசையில் ஒருவராக இருந்துவபவர் ஏ.எல்.விஜய் (AL Vijay). இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகி ஹிட்டடித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டில் வெளியான கிரீடம் (Kireedam) என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான நிலையில், அதை தொடர்ந்து பல படங்களை இயக்கியிருக்கிறார். தனது முதல் படத்திலே அஜித்தை (Ajith) வைத்து இயக்கியிருந்த நிலையில், இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. பின் மதராசபட்டணம் (Madrasapattinam), தெய்வ திருமகள் (Deiva Thirumagal), தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த வரிசையில், முன்னாள் நடிகரும், தமிழக முதல்வருமான விஜயை (CM Vijay) வைத்து “தலைவா” (Thalaivaa) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார்.

இந்த படமானது தளபதி விஜய்யின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட திரைப்படம் என கூறலாம். அந்த வகையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இன்று, (04/07/2026) முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவருக்கு மறக்கமுயடியாத பரிசையும் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை