Homeசெய்திகள்சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க கடைசி வாய்ப்பு.. ஜூலை 15க்குள் விண்ணப்பிக்காவிட்டால் வாய்ப்பு இல்லை!

சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க கடைசி வாய்ப்பு.. ஜூலை 15க்குள் விண்ணப்பிக்காவிட்டால் வாய்ப்பு இல்லை!

சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க ஜூலை 15ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் நிர்வாகம் தமிழகம் முழுவதும் குறைந்த விலையில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் பால், தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில், ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கடந்த மாதமே அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளது. ஆவின் பாலகம் அமைக்க ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளதால் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவின் நிறுவனம் எங்கெல்லாம் ஆவின் பாலகம் அமைக்கலாம் என்பது குறித்த விவரத்தை பார்ப்போம்.

வ.எண் மண்டலம் முகவரி
1) அசோக் நகர் கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி
2) வட சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு, சென்னை
3) வட சென்னை மிண்ட் தெரு, சௌகார்பேட்டை, சென்னை
4) பெரம்பூர்
எண்.131, அபிராமி அவென்யூ, 9வது தெரு, கவியரசு கண்ணதாசன் நகர் (ரேணுகா மருத்துவமனை அருகில்), சென்னை

5) அண்ணா நகர் எம்எம்டிஏ காலனி, மதுரவாயல், சென்னை
6) தி.நகர் வலிதாபுரம், தி.நகர், சென்னை
7) பாலவாக்கம் பிடிசி குடியிருப்பு, பல்லவன் குடியிருப்பு, தோரைப்பாக்கம், சென்னை
8) பாலவாக்கம் காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை
9) மயிலாப்பூர் சிஐடி காலனி, ஆழ்வார்பேட்டை, சென்னை
விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
ஆவின் பாலகம் அமைக்க விருப்பப்படுபவர்கள் aavin.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை உரிய முகவரிக்கு அனுப்ப வைக்க வேண்டும். சரியான விண்ணப்ப படிவத்தை உரிய முகவரிக்கு ஜூலை 15ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். the general manager, marketing unit, tcmpf ltd, no.3A, Pasumpon muthuramalinganar salai, nandanam, Chennai – 65 என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 3300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பாலகம் அமைக்க விருப்பப்படுபவர்கள் சிறு தொழில் அல்லது வணி அனுபவச் சான்றிதழ் கட்டாயமாகும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1 லட்சம் பாதுகாப்பு தொகையை கட்டாயமாக செலுத்த வேண்டும்.
சில்லறை வணிகத்தில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 1 ஆண்டுக்கான வங்கி கணக்கு வரவு ரூ.25 லட்சத்திற் மேல் இருக்க வேண்டும்.
பாலகத்தின் உட்புற அமைப்புப் பணிகளை, ஒப்பந்ததாரர் தனது சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும். இந்த கட்டுமானச் செலவை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு திருப்பிச் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை