Homeசெய்திகள்தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க புதிய திட்டம்: அதிவிரைவு சாலைகளுக்கும் முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க புதிய திட்டம்: அதிவிரைவு சாலைகளுக்கும் முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அவற்றை குறைக்கும் வகையில் தனி செயல் திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சாலைப் போக்குவரத்து உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களை விரைந்து தயாரிக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் ஏற்பட்டு வரும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் தனித்துவமான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நெடுஞ்சாலை துறை ஆலோசனைக் கூட்டம்:
சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தாலும், அதிவிரைவு சாலைகள் அமைப்பதில் ஏன் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, விரைவில் அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளை தடுக்க தனி செயல் திட்டம்:
மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அவற்றை குறைக்கும் வகையில் தனி செயல் திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதில் சாலை வடிவமைப்பு மேம்பாடு, விபத்து அபாயப் பகுதிகளை சீரமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கான செயல்திட்டம்:
அதேபோல், தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை உயர்வை கருத்தில் கொண்டு, எதிர்கால போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 10 ஆண்டுகளுக்கான நீண்டகால செயல்திட்டத்தை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயல்திட்டத்தில் புதிய மேம்பாலங்கள், புறவழிச்சாலைகள், வளையச்சாலைகள், நகர இணைப்புச் சாலைகள், பல்மட்ட சந்திப்புகள், சரக்கு போக்குவரத்துக்கான தனி வழித்தடங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சாலை நிர்வாக அமைப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை