Homeஅரசியல்அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைகிறார்: ஜூலை 2-ல் பிரமாண்ட இணைப்பு விழா!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைகிறார்: ஜூலை 2-ல் பிரமாண்ட இணைப்பு விழா!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைகிறார்! ஜூலை 2-ல் மாமல்லபுரத்தில் விஜய் முன்னிலையில் பிரமாண்ட இணைப்பு விழா நடைபெறுகிறது.

தவெகவில் இணையவுள்ளதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இணைப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் ஜூலை 02, ஜூலை, 2026 காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும் தவெகவில் என்னை இணைத்துக்கொண்டு, அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர உள்ளேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தவெகவில் இணையவுள்ளதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இணைப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் ஜூலை 02, ஜூலை, 2026 காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும் தவெகவில் என்னை இணைத்துக்கொண்டு, அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர உள்ளேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தவெகவில் இணையவுள்ளதாக சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு
அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில், விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், அதிமுகவிற்கு 3வது இடம் கிடைத்தது. இதனையடுத்து அதிமுகவில் சலசலப்பு நிலவியது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் அணி என 2 அணிகளாக பிரிந்தனர். இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏகள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சி.விஜயபாஸ்கர் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தற்போது அவர் தவெகவில் இணைய போவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான மாபெரும் இணைப்பு விழா நாளை (ஜூலை 02) காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஊடக நண்பர்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை